என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    • ஏ.டி.எம்.மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர்.
    • ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை

    கோவை நஞ்சப்பா ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    சம்பவத்தன்று இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது யாரோ மர்ம நபர் ஏடிஎம் எந்த எந்திரத்தில் பணம் வைக்கும் அறையை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், அதிகாலை 3 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு சென்ற ஆயுதத்தால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், முடியாததால் அங்கிருந்து சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×