என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிலம்ப போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்கள்.
சிலம்ப போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்திய மாணவர்கள்
- சிலம்ப பயிற்சியாளரிடம் 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
- பதக்கம் வென்றவர்களை ஊர் மக்கள் பாராட்டினர்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்ற விவசாயி மகன் கணேஷ் திருச்சியில்தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
அதேபோன்று கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமதுரை, என்ற விவசாயியின் மகள் வினிதா தஞ்சை தனியார் கல்லூரியில் பி.காம்., சிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .
2 பேரும் சரவணன் என்ற சிலம்பு பயிற்சியாளரிடம் 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலஅ ளவிலான கல்லூரி மாணவர்கள் பிரிவில் சிலம்பு போட்டியில் பங்கேற்றனர்.
இதில்கணேஷ் முதலிடமும் வெற்றி பெற்று தங்க பதக்கமும் ரூ 1 லட்சம் பரிசு பெற்றார்.
அதேபோன்று கல்லூரிபயிலும் பெண்கள் பிரிவில் சிலம்பு போட்டியில் பங்கேற்று2-ம் வது இடத்தைப் பிடித்து வெள்ளிபதக்கமும் பெற்று இரண்டு மாணவர்களும் தங்களுடைய கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கம் வென்ற இருவரையும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.






