search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைப்படி  1089 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு கால்நடைத்துறை சிறப்பாக செயல்படுகிறது -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவசமாக கால்நடைகளை வழங்கியபோது எடுத்தபடம்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைப்படி 1089 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு கால்நடைத்துறை சிறப்பாக செயல்படுகிறது -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • முதல்-அமைச்சர் ஸ்டாலின் கால்நடைகளின் உடல்நலத்தை பேணும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளார்.
    • கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

    உடன்குடி:

    உடன்குடிதேரியூர் கால்நடைமருத்துவ வளாகத்தில் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்குதல் தொடக்க விழா, சினையுறா பசுக்களுக்கான சிகிச்சை மற்றும் கறவைப்பசுக்களில் மடிநோய் கண்டறிதல் முகாம் ஆகியவற்றின் தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணைஇயக்குநர் ராஜன் வரவேற்றார். சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பதிவாளர் டென்சிங்ஞானராஜ், யூனியன் சேர்மன் பாலசிங், யூனியன் கவுன்சிலர் மகாராஜா, திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் செல்வகுமார், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இத்திட்டங்கள் குறித்து சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் விளக்க வுரையாற்றினார். முகாமினை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்பு தொழில் கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு இணைந்த தொழிலாகும். கால்நடைகளை வளர்ப்பது பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும்.

    கால்நடை மருத்துவர்கள்

    இதன் முக்கியத்துவத்தை அறிந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் கால்நடைகளின் உடல்நலத்தை பேணும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளார். புதியதாக 1089 கால்நடை மருத்துவர்களை நியமனம் செய்து கால்நடை துறையை வளர்ச்சி அடைய செய்துள்ளார். கடந்த ஆண்டு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடந்ததைப்போல இந்த ஆண்டும் நடைபெறும்.

    நாட்டு கோழிப்பண்ணை

    நெல்லை மாவட்ட கால்நடைப்பண்ணையில் ரூ.9.60 கோடி நிதி ஓதுக்கீட்டில் குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலையுடன் கூடிய நாட்டுக்கோழிப்பண்ணை வளாகமாகும்.

    தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கோழிப்பண்ணை தொழில் முன்னேறியதைப்போல் தென் மாவட்டங்களிலும் கோழிப்பண்ணை தொழில் பரவலாக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து சிறப்பாக கால்நடைகளை பராமரிப்பு செய்தவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அமிர்தராஜ், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் சேர்மன் சுரேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் விவசாயஅணி சக்திவேல், வர்த்தகஅணி சந்தையடியூர் ரவிராஜா, மாணவரணி அலாவூதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், பேரூராட்சி நியமனக்குழு ஜான்பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், முன்னாள் கவுன்சிலர் சலீம்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×