என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்-கோவையில் இன்று 839 இடங்களில் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்
    X

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்-கோவையில் இன்று 839 இடங்களில் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்

    • கோவை மாவட்டத்தில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது.
    • மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளும் இணைக்க தேவையில்லை.

    கோவை,

    தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.

    இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து இந்த திட்டத்தில் பயன் பெறுவர்களுக்கான வரை யறைகளும் வெளியிடப்ப ட்டது.

    அதன்படி இந்த திட்டத்தில் பயன் பெறுப வர்கள் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகிக்கும் பணி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகித்தனர்.

    கோவை மாவட்டத்தில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய முகாமானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்க உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 212 நியாய விலைக்க டைகள், அனைத்து வருவாய் மாவட்டங்களில் பகுதியில் உள்ள 584 நியாயவி லைக்கடைகள் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள 43 நியாயவிலை கடைகள் என மொத்தம் 839 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமானது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடந்தது. இன்று நடந்த சிறப்பு முகாமுக்கு ஏராளமான பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விண்ணப்ப த்துடன் வந்து பதிவு செய்து சென்றனர். அனைவருக்கும் ஏற்கனவே டோக்கன் வினியோகிக்கப்பட்டு அதில் நேரம், கொடுக்கப்பட்டி ருந்ததால், அந்த நேரத்திற்கு வந்து விண்ணப்பித்து சென்றனர்.

    2-ம் கட்டமாக 532 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன் கார்டு தாரர்களுக்கு விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-

    முதல் கட்ட விண்ணப்ப பதிவுக்கான ரேஷன் கார்டுதா ரர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ண ப்பங்கள் வழங்கப்பட்டு ள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட டோக்கனில் எந்த தேதியில் எந்த நேரத்திற்கு வர வேண்டும் மற்றும் முகாம் நடைபெறும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தில் குடும்ப தலைவியின் விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முகாமின்போது கொண்டு வர வேண்டும்.

    விண்ணப்பத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப ரசீது, வங்கி பாஸ் புத்தகம் எண் உள்ளிடவற்றை தவறின்றி குறிப்பிட வேண்டும்.

    மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளும் இணைக்க தேவையில்லை.

    விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்கத்தான் நேரம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே அந்த நேரத்திற்கு ஏற்ப முகாமில் பங்கேற்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்ப ங்களும் பதிவு செய்யப்படும்.

    மேலும் விண்ணப்ப பதிவு முகாமின் போது விண்ணப்பதாரரின் ஆதார் எண் பிவு செய்யப்பட்டு, விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலமாக சரிபார்க்க ப்படும். விரல் ரேகை சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிக்கு கடவுச்சொல் அளிக்க ப்படும்.

    எனவே விண்ணப்பதாரர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போணை முகாமின் போது கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர் ஆவார்.

    இந்த முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது. முகாமின் போது உதவுவதற்காக தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    5 கடைக்கு ஒரு பகுதி அலுவலர், 15 கடைக்கு ஒரு வட்டார அலுவலர் மற்றும் ஒவ்வொரு வட்டத்திற்கும் அந்தந்த தாசில்தார்கள் இந்த முகாம் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×