என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
    X

    கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்

    • அரியலூர் மணக்குடியில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
    • மணக்குடி ஊராட்சி மன்ற செயலர் தேசிங்கு நன்றி கூறினார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மணக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் ரிச்சர்ட் ராஜ் முன்னிலை வகித்தார்.

    முகாமில் பெரிய, சிறிய மணக்குடி மற்றும் நுரையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 445 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 350 பசு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியும், 400 ஆட்டினங்களுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

    உரிய நேரத்தில் பருவத்துக்கு வராத 19 கிடாரிகள், பலமுறை கருவூட்டல் செய்தும் சினையுறாத பசு மாடுகள் உள்ளிட்ட 61 மாடுகளுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய தாது உப்பு கலவை பொட்டலங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆடுகள் மற்றும் மடிவீக்க நோயால் பாதிக்கப்பட்ட 3 பசு மாடுகளில் இருந்து சாணம் மற்றும் பால் உள்ளிட்ட மாதிரி பொருள்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    முகாம் முடிவில் கன்று கள் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்ட 22 கிடேரி கன்றுகளில் சிறந்த 10 கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் தலைமையில், ஓட்ட கோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், பொய்யாத நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ராஜா, கால்நடை ஆய்வாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராமலிங்கம், மாரிமுத்து, கலியமூர்த்தி, ஜெயக்குமாரி உள்ளிட்ட மருத்துவ குழுவி னர் முகாம் பணிகளை மேற்கொண்டனர். முடிவில், மணக்குடி ஊராட்சி மன்ற செயலர் தேசிங்கு நன்றி கூறினார்.

    Next Story
    ×