என் மலர்
அரியலூர்
ஆண்டிமடத்தில் சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையலர் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைப்பெற்றது.
புத்தாக்க பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி தலைமை தாங்கினார்.
ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் அசோகசக்கர வர்த்தி, வட்டார ஊட்டச்சத்து அலுவலகத்திலிருந்து பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோர் உணவு பாது காப்பு குறித்தும்,
தீ சம்பவம் ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்தும், வட்டார மருத்துவ அலுவலர் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் போது எந்த வகையில் சமையல் பாதுகாப்பு உணர்வோடும் செய்ய வேண்டும் என்றும் சமையலில் ஆரோக்கியமான சூழல் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார் (வயது 21).
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது (மாணவி) சிறுமியை திருமணம் செய்த நிலையில், தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது பற்றி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, கோவில் இடங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த காலங்களில் பல்வேறு விதமான போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கோட்டைக்காடு வழியாக பெண்ணாடம் வெள்ளாற்றில் கட்டப்பட்ட பாலத்தில் இணைப்பு சாலை அமைத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
சோழன்குடிகாடு கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழரசு கட்சியின் பொது செயலாளர் இயக்குனர் கௌதமன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அரியலூருக்கு வந்த அலங்கார ஊர்தியை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
அரியலூர் :
'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி அரியர்லூர் மாவட்டத்துக்கு வருகை தந்தது.
பெரம்பலூர் மானா மதுரை நெடுஞ்சாலையின் மாவட்ட எல்லையான அல்லிநகரம் அருகே வந்த இரண்டு அலங்கார ஊர்திகளை சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மேளதாளம் முழங்க, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அரியலூர் பேருந்துநிலையம் அருகே வந்த ஊர்திகளை மாவட்ட கலெக்டர் ரணசரஸ்வதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர்.
ஒரு ஊர்தியில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகளும், மற்றொரு அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர், காமராஜர், ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு.அய்யர், காயிதே மில்லத், தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, கக்கன் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்றிருந்தன.
இவைகள் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
குண்டு வீசி நீதிக்கட்சி தலைவரை கொல்ல முயற்சியில் போலீசார் விசாரணை
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந் தவர் சுப இளவரசன். தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனரான இவர், தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று இவர் வந்த கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி ஜெயங்கொண்டம் போலீசில் சுப இளவரசன் புகார் அளித்தார். அதில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் துளா ரங்குறிச்சி பைபாஸ் பிரிவு சாலையில் வந்தபோது,
அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல், எனது கர் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் வந்துவிட்டோம்.
எனவே துப்பாக்கியாலும், வெடிகுண்டுகளாலும் தாக்கிய நபர்கள் மீது, ஆயுதங் கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழும், சதித்திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றவர்கள் என கொலை முயற்சி பிரிவின் கீழும் வழக்குப்பதிந்து மேற்படி நபர்களை கைது செய்ய வேண்டும். எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆகியோர் சுபஇளவரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூரில் கிராமிய கலைக்குழுவினர் மூலம் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த இரும்புலிக்குறிச்சி மற்றும் குமிழியம் கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ் கிராமிய கலைக் குழு மூலம் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு ஜென்சி தலைமை வகித்து பேசினார். அட்மா திட்ட தொழில்நுட் மேலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர், கோடை உழவின் முக்கியத்துவம், மண் பரிசோதனைப் படி உரமிடுதல், நீர்பாசன முறைகள், பரிந்துரைக்கப் பட்ட உர மேலாண்மை, பூச்சி நோய் கொல்லிக்களை கையாளும் முறைகள், விதை நேர்த்தியின் அவசியங்கள், சாகுபடி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய பயிர் எண்ணிக்கை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவா முருகன் உதவி வேளாண் அலுவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
அரியலூர் நகராட்சி சுயேட்சை வேட்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் :
அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்து வருகிறார். இதற்கிடையே நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சி வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மணிவேல் அரியலூர் நகராட்சி 16-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அவர் தனது வீட்டின் கட் மான பணிக்காக செந்துறையில் இரும்புக்கடை வைத்து நடத்தி வரும் ஜாகீர் உசேன் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி இரும்பு கம்பிகளை வாங்கியிருந்தார்.
அதற்கான பணத்தை தருமாறு ஜாகீர்உசேன், மணிவேலிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு வந்த ஜாகீர் உசேனிடம், பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மணிவேல் கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜாகீர்உசேன் அரியலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் விசாரணை நடத்தி, ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 673 ஏமாற்றியதாக மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.
இதையடுத்து அரியலூர் 1-வது குற்றவியல் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிவேலை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சந்திரசேகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணிவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
வாலாஜா நகரத்தில் உள்ள மண்பரிசோதனை நிலையம், கீழக்கொளத்தூர் நெல் உருளை நேரடி விதைப்பு எந்திரம் மூலமாக நடவு செய்யப்பட்டுள்ள வயல், நிலக்கடலை விதை பண்ணை, நிலக்கடலையின் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.
வெற்றியூரில் ஆமணக்கு விதைப் பண்ணை, தூத்தூர் நேரடி கொள்முதல் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர், விவசாயிகளிடம் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சண்முகம், வேளாண் உதவி இயக்குநர்கள் அரியலூர் சாந்தி, திருமானூர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதிய கட்டிடத்தை பள்ளிக்கு வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் அருகே தாமரை குளத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, பள்ளிக்கே வழங்கக்கோரி, அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும், சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வரும் 24-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுக் காணலாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து உண்ணாவிர போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
வேட்பாளர்கள் கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
அதன்படி, அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்துவதற்கு 1,000 நபர்கள் அல்லது கூட்டம் நடக்கும் இடங்களில் 50 சதவீதம் கொள்ளவுக்கு மிகாமல் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.
முகக்கவசம் கட்டா யம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். கூட்டங்கள் நடைபெற உள்ள இடத்தை நேரடி ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்படும். அரங்குகளில் கட்சி கூட்டமோ, வேட்பாளர்கள் கூட்டமோ நடத்தினால் அதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த சான்று பெற வேண்டும்.
இதற்கு அந்தந்த தேர்தல் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதால் பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
மேலும், அரசியல் கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.
எனவே அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 30 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக மோதுகிறது.
அரியலூர்:
அரியலூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 134 பேரில் 45 பேர் வாபஸ் பெற்றதால் களத்தில் 89 பேர் உள்ளனர். இதில் 16 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க.வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.
வார்டு-1ல் தி.மு.க. வேட்பாளர் கீதாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கவிதாவும், வார்டு-2ல் தி.மு.க. வேட்பாளர் செல்வராணியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ராஜேஸ்வரியும், வார்டு-3ல் தி.மு.க. வேட்பாளர் சத்யனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முருகானந்தமும், வார்டு-5ல் தி.மு.க. வேட்பாளர் சாந்தியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் பூங்கொடியும் போட்டியிடுகின்றனர்.
வார்டு&6ல் தி.மு.க. வேட்பாளர் ரேவதியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சுமதியும், வார்டு-7ல் தி.மு.க. வேட்பாளர் மணிவண்ணன் எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கருணாநிதியும், வார்டு-8ல் தி.மு.க. வேட்பாளர் சரவணனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரனும், வார்டு-9ல் தி.மு.க. வேட்பாளர் செல்வராணியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மகாலட்சுமி போட்டியிடுகின்றனர்.
வார்டு-10ல் தி.மு.க. வேட்பாளர் ராஜஸ்ரீயை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் இன்பவள்ளியும், வார்டு-11ல் தி.மு.க. வேட்பாளர் சுந்தரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முகமது இஸ்மாயிலும், வார்டு-12ல் தி.மு.க. வேட்பாளர் மணிமேகலையை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கஸ்தூரியும், வார்டு-13ல் தி.மு.க. வேட்பாளர் சுர்ஜித்தை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வெங்கடாஜலபதி போட்டியிடுகின்றனர்.
வார்டு-14ல் தி.மு.க. வேட்பாளர் ஜெயந்தியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ரேகாவும், வார்டு-15ல் தி.மு.க. வேட்பாளர் ராணியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கனகாவும், வார்டு-16ல் தி.மு.க. வேட்பாளர் ராஜேஸ் எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சிவகுமாரும், வார்டு-17ல் தி.மு.க. வேட்பாளர் சசிகுமாரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஜீவாவும் போட்டியிடுகின்றனர்.
ஜெயங்கொண்டம் நகராட் சில் உள்ள 21 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 140 பேரில் 32 பேர் வாபஸ் பெற்றதால் களத்தில் 108 பேர் உள்ளனர். இதில் 14 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேரிடையாக களம் காணுகின்றனர்.
வார்டு-1ல் தி.மு.க. வேட்பாளர் புனிதவேலுவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தங்கபாண்டியனும், வார்டு-2ல் தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேலனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மூர்த்தியும், வார்டு-3ல் தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஜெயராமனும், வார்டு-4ல் தி.மு.க. வேட்பாளர் நிர்மலாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கதிரசி போட்டியிடுகின்றனர்.
வார்டு-5ல் தி.மு.க. வேட்பாளர் சிவகுருநாதனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சேகரும், வார்டு-6ல் தி.மு.க. வேட்பாளர் சாந்தியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வராஜ், வார்டு-8ல் தி.மு.க. வேட்பாளர் கருணாநிதியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஜாபர்அலி, வார்டு-11ல் தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சுப்பிரமணியன் போட்டியிடுகின்றனர்.
வார்டு&12ல் தி.மு.க. வேட்பாளர் அம்பிகாபதியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மணிமொழி, வார்டு&13ல் தி.மு.க. வேட்பாளர் மீனாட்சியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வசந்தி, வார்டு&14ல் தி.மு.க. வேட்பாளர் ராஜமாணிக்கம் எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.
வார்டு&15ல் தி.மு.க. வேட்பாளர் ருஷனா பேகத்தை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ராஜேஸ்வரி, வார்டு&18ல் தி.மு.க. வேட்பாளர் கிருபாநிதியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வராஜ், வார்டு&19ல் தி.மு.க. வேட்பாளர் லாவன்யாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வி போட்டியிடுகின்றனர்.

அரியலூரில் 321 பேர் போட்டியிடுகின்றனர்.
அரியலூர் :
அரியலூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய் திருந்த 134 பேரில் 45 பேர் வாபஸ் பெற்றதால் களத்தில் 89 பேர் உள்ளனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சில் உள்ள 21 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 140 பேரில் 32 பேர் வாபஸ் பெற்றதால் களத்தில் 108 பேர் உள்ளனர். உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள 30 வார்டுகளுக்க 138 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 13 பேர் வாபஸ் பெற்றதால் 124 பேர் களத்தில் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 412 பேரில் 90 பேர் வாபஸ் பெற்ற நிலையில், ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் 321 பேர் களத்தில் உள்ளனர்.