என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார் (வயது 21).
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது (மாணவி) சிறுமியை திருமணம் செய்த நிலையில், தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது பற்றி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
Next Story






