என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கு  உணவு சம்பந்தமான புத்தாக பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கு உணவு சம்பந்தமான புத்தாக பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

    ஆண்டிமடத்தில் சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையலர் உதவியாளர்களுக்கு  ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைப்பெற்றது. 

    புத்தாக்க பயிற்சிக்கு  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் அசோகசக்கர வர்த்தி, வட்டார ஊட்டச்சத்து அலுவலகத்திலிருந்து பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோர் உணவு பாது காப்பு குறித்தும், 

    தீ சம்பவம் ஏற்பட்டால் எப்படி தடுப்பது  என்பது குறித்தும்,  வட்டார மருத்துவ அலுவலர் குழந்தைகளுக்கு சமையல்  செய்யும் போது எந்த வகையில் சமையல் பாதுகாப்பு உணர்வோடும்  செய்ய வேண்டும் என்றும் சமையலில் ஆரோக்கியமான  சூழல் மற்றும்  முக்கியத்துவம் குறித்து பேசினார்.
    Next Story
    ×