என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைக்குழுவினர்.
வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு
அரியலூரில் கிராமிய கலைக்குழுவினர் மூலம் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த இரும்புலிக்குறிச்சி மற்றும் குமிழியம் கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ் கிராமிய கலைக் குழு மூலம் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு ஜென்சி தலைமை வகித்து பேசினார். அட்மா திட்ட தொழில்நுட் மேலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர், கோடை உழவின் முக்கியத்துவம், மண் பரிசோதனைப் படி உரமிடுதல், நீர்பாசன முறைகள், பரிந்துரைக்கப் பட்ட உர மேலாண்மை, பூச்சி நோய் கொல்லிக்களை கையாளும் முறைகள், விதை நேர்த்தியின் அவசியங்கள், சாகுபடி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய பயிர் எண்ணிக்கை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவா முருகன் உதவி வேளாண் அலுவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






