என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தேர்தல் களத்தில் 321 பேர் போட்டி
அரியலூரில் 321 பேர் போட்டியிடுகின்றனர்.
அரியலூர் :
அரியலூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய் திருந்த 134 பேரில் 45 பேர் வாபஸ் பெற்றதால் களத்தில் 89 பேர் உள்ளனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சில் உள்ள 21 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 140 பேரில் 32 பேர் வாபஸ் பெற்றதால் களத்தில் 108 பேர் உள்ளனர். உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள 30 வார்டுகளுக்க 138 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 13 பேர் வாபஸ் பெற்றதால் 124 பேர் களத்தில் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 412 பேரில் 90 பேர் வாபஸ் பெற்ற நிலையில், ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் 321 பேர் களத்தில் உள்ளனர்.
Next Story






