என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் சார்பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர்:
அரியலூர் அடுத்த நாயக்கர் பாளையத்தைச் சேர்ந்த நீலமேகம் தனது மனைவி கொளஞ்சி பெயரில் உள்ள இடத்தை மாற்றக் கோரி கடந்த 2015ம் ஆண்டுஅரியலூர் சார்பதிவாளர் அலுவ லகத்தை அணுகியுள்ளார்.
அதற்கு ரூ.4,500 லஞ்சம் தரவேண்டும் என்று சார் பதிவாளர் சுபேதார்கான் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும் பாத நீலமேகம், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனைப் படி கடந்த 4.11.2015 அன்று நீலமேகம், சார்பதிவாளர் சுபேதார்கானிடம் ரூ.4,500 கொடுத்த போது, அவர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்டதலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடை பெற்றது, வழக்கைவிசாரித்த நீதிபதி சரவணன், குற்றம் சாட்டப்பட்ட சுபேதார் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடை பெற உள்ளது என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கமாத்தி ரைகள் வழங்கும் முகாம் 14.3.22 முதல் 19.3.22 வரையில் அனைத்து பள்ளி கள் மற்றும் கல்லூரிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடிமையங்களில் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட நாட்களில் விடுபட்ட அனைத்து குழந்தைக ளுக்கும் 21.03. 2022 அன்று குடற்புழு நீக்கமாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
முகாமில் 1 வயதுமுதல் 19 வயது வரையிலான மொத்தம் 51,272 அங்கன்வாடி குழந் தைகள், 25,636 கல்லூரி மாணவர்கள், 1,51,946 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2,28,854 குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் 65,419 மகளிர் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு)குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
முகாமில் பொது சுகாதாரத் துறை பணியாளர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள் 120 மற்றும் 251 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 714 அங்கன்வாடிப் பணி யாளர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய உள்ளனர்.
1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மாத்திரை, 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்களுக்கு முழு மாத்திரை மற்றும் மகளிர் முழு மாத்திரை வழங்கப்பட உள்ளது.
குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
இம்மாவட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், பள்ளி நிர்வாக குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகசங்கத்தினர் மற்றும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரையின் பயன் பற்றியும் மாத்திரைகள் கொடுக்கப்படும் நாள் பற்றியும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எடுத்துக் கூறுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வீட்டில் ரேசன் அரிசி பதுக்கிவைத்த வியாபாரியை கைது செய்தனர்.
அரியலூர்:
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குனர் மற்றும் மதுரை மண்டல சூப்பிரண்டின் அறிவுறுத்தலின்படி, திருச்சி உட்கோட்ட துணை சூப்பிரண்டு மற்றும் திருச்சியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில்,
அரியலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கீழப்பழுவூர், திருமானூர் ஆகிய பகுதிகளில் குடிமைப்பொருட்கள் கடத்தல், பதுக்கல் ஆகியவை தொடர்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதில் திருமழபாடியை சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், துரைராஜ் அரிசி, எண்ணெய் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் துரைராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிமடத்தில் மானிய விலையில் தோட்டகலை இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை இடு பொருட்களான பழமரக்கன்றுகள், ஊட்டச்சத்து காய்கறி தோட்ட விதை தொகுப்புகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டக்கலை இடு பொருட்களை வழங்கினார்.
மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வேளாண்மை செய்து நீடித்த நிலையான லாபம் அடையுமாறு விவசாயிகளை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் ராதிகா, துணை வேளாண்மை அலுவலர்கள் பாலுச்சாமி, ராஜேந்திரன் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், இளநிலை ஆராய்ச்சி யாளர் அபிலாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரியலூரில் எஸ்.ஐ.உட்பட 2 பெண் போலீசார் தற்கொலை முயற்சியால் பரபரப்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கூவாகம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பிரியங்கா (வயது 28). இவர் அரியலூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் திடீரென குளிர்பானத்தில் எரிமருந்து கலந்து குடித்தார். பின்னர் அவரே இருசக்கர வாகனத்தில் போய் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இதுபற்றி அறிந்த அவரின் உறவினர்கள் அங்கிருந்து அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த பிரியங்கா டிபன் சாப்பிடுவதாக கூறிச்சென்றார். பின்னர் விஷம் அருந்தியதாகவும், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு குடும்ப பிரச்சினை இருப்பதாவும் கூறினர்.
இந்த நிலையில் அரியலூர் போலீஸ்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த லட்சுமி பிரியா (32) என்பவரும் திடீரென பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தகவல் வெளி யாகி யுள்ளது. அரியலூர் ராஜூ நகர் பகுதியில் கணவர் சக்தி முருகனுடன் வசித்து வந்த லட்சுமி பிரியா வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டு டூட்டிக்கு காவல் நிலையத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.
பின்னர் மயங்கி விழுந்த அவரை சக காவலர்கள் மீட்டு திருச்சியில் பெண் காவலரை சேர்த்துள்ள அதே ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் அரியலூர் ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக உள்ளார். ஒரு குழந்தை உள்ளது. இவரது தற்கொலை முயற்சிக்கு உறுதியான காரணம் தெரியவில்லை. பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெண் போலீசை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கலைவிருது பெற தகுதியுள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரியலூர் :
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இயல், இசைமற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்க ளுக்கு வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர் வாளர் குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.
ஆகவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட் டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட் டம், கோல்கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம்,
கைச் சிலம்பாட்டம் (வீரக் கலை), மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக்கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலை களில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19&35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36&50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51&65 வயதுக்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளது.
எனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் விண்ணப்பிக்க கூடாது.
விண்ணப்பங்கள் 25&ந் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி&06 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட வேளாண் துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமை வகித்து, உளுந்து சாகுபடி செய்வதன் அவசியம், அதன் பயன்பாடு, மண்ணிண் மேலாண்மை குறித்து பேசினார்.
வேளாண் உதவி இயக்குநர் ஜென்சி முன்னிலை வகித்து, வேளாண் துறையால் வழங்கப்படும் உளுந்து பயிருக்கான மானியம், திரவ உயிர் உரங்களின் பயன்பாடுகள், பயறு வகை நுண்ணூட்டம் பற்றி எடுத்து கூறினார்.
இந்த பயிற்சியில் தளவாய் பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் ஆனந்தி, ஒளிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடு படுத்திய வழக்கில் தலை மறைவாக இருந்த மேலும் ஒரு பெண் செவ்வாய்க் கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா (28), கீழப்பழுவூர் சந்திரா, ராஜேந்திரன் (62), தஞ்சை வினோத் (29), வி.கைகாட்டி பிரேம் (29), பாலச்சந்திரன் (27), செந்துறை தனவேல் (45), வெற்றிச்செல்வன் (37), திருமானூர் தெய்வீகன் (44) ஆகிய 9 பேரை ஜெயங் கொண்டம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அமிர்தராயன் கோட்டையைச் சேர்ந்த நாகராஜ் மனைவி இந்திரா (40) என்பவரை செவ்வாய்க் கிழமை இரவு கைது செய்த காவல் துறையினர், மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
அரியலூர் அருகே பேருந்து நிறுத்ததில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே பேருந்து நிறுத்ததில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் அடுத்த பெரியநாகலூர், சின்னநாகலூர், புள்ளிகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள், பெரியநாகலூர் பேருந்து நிறுத்ததில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பெரியநாகலூர் பேருந்து நிறுத்ததில் எந்த அரசுப் பேருந்துகளும் நிற்கவில்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டிருந்த மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தையடுத்து மாணவர்கள் கலைந்துச் சென்றனர். இதனால் வி.கைகாட்டி&அரியலூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் அருகே தனியார் வசமிருந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை அறநிலையத்துறை தன்வசப்படுத்தியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் கண்டிராதித்தம் கருப்புசாமி அய்யனார் கோவிலில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வந்ந திருமண மண்டபத்தை அரசு இந்து சமய அறநிலைத்துறை சுவாதினம் (தன்வசம் கையகப்படுத்தியது) செய்தது.
இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் அனுமதியில்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலின் உள்ளே இருந்த மண்டபம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கின்படி 25.2.2022 அன்றைய உத்தரவின்படி தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் தமிழக அரசின் அறநிலைதுறை வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
எனவே இந்த மண்டபத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளும் வகையில் அனுமதி பெற திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் நிர்வாகத்தை அணுகி சுப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கோவிலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த மண்டபத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்தும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நாகராஜன் முன்னிலையில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் மணிவேல் தலைமையில், கண்டராதித்தம் வருவாய் அலுவலர் மேகலா, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராமமூர்த்தி ஆகியோர் கையகப்படுத்தினர்.
நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன், காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் செந்தில்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.
திருமானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை செய்வது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:
திருமானூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏகம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி தங்கசண்முகசுந்தரம் கூறியதாவது: விவசாயத்துறை சார்ந்த படிப்பினை பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்களிடத்தில் ரசாயன பயன்பாடு 2ம் உலகப்போருக்குப் பின் இந்தியாவுக் குள் வந்தது பற்றியும்,
இன்றைய உலகில் ரசாயன வேளாண்மையை தவிர்த்து இயற்கை வேளாண்மை செய்வது குறித்தும், நோயில்லாமல் வாழ இயற்கை வேளாண்மையை கடை பிடிக்க வேண்டிய தேவை உள்ளது.
எனவே வேளாண்மை சார்ந்த படிப்பினை மேற் கொள்ளும் திருமானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்று எதிர் காலத்தில் திகழ வேண்டும் எனவும், விரைவில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வயலில் பயிலரங்கம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதில் ஏகம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த முருகானந்தம், அசோகன் பள்ளி உதவி தலைமை ஆசிரியை மற்றும் வேளாண்துறை சார்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சின்னவளையம் பஸ் நிறுத்தத்தில் 2 பேர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சின்னவளையம் கிராமம் கிழக்குதெருவை சேர்ந்த ஆனந்த்பாபு வயது 37, ஆமணக்கந்தோண்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி வயது 57 ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 80 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.