என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
முன்னாள் சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
அரியலூர் அருகே லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் சார்பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர்:
அரியலூர் அடுத்த நாயக்கர் பாளையத்தைச் சேர்ந்த நீலமேகம் தனது மனைவி கொளஞ்சி பெயரில் உள்ள இடத்தை மாற்றக் கோரி கடந்த 2015ம் ஆண்டுஅரியலூர் சார்பதிவாளர் அலுவ லகத்தை அணுகியுள்ளார்.
அதற்கு ரூ.4,500 லஞ்சம் தரவேண்டும் என்று சார் பதிவாளர் சுபேதார்கான் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும் பாத நீலமேகம், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனைப் படி கடந்த 4.11.2015 அன்று நீலமேகம், சார்பதிவாளர் சுபேதார்கானிடம் ரூ.4,500 கொடுத்த போது, அவர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்டதலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடை பெற்றது, வழக்கைவிசாரித்த நீதிபதி சரவணன், குற்றம் சாட்டப்பட்ட சுபேதார் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story






