என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

    அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடை பெற உள்ளது என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கமாத்தி ரைகள்  வழங்கும் முகாம் 14.3.22 முதல் 19.3.22 வரையில் அனைத்து பள்ளி கள் மற்றும் கல்லூரிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடிமையங்களில் வழங்கப்பட உள்ளது.  

    மேற்கண்ட நாட்களில் விடுபட்ட அனைத்து குழந்தைக ளுக்கும் 21.03. 2022 அன்று குடற்புழு  நீக்கமாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. 

    முகாமில் 1 வயதுமுதல் 19 வயது வரையிலான மொத்தம் 51,272 அங்கன்வாடி  குழந் தைகள், 25,636 கல்லூரி மாணவர்கள், 1,51,946 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2,28,854 குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் 65,419 மகளிர் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு)குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. 

    முகாமில் பொது சுகாதாரத் துறை பணியாளர்கள்,கிராம சுகாதார  செவிலியர்கள் 120 மற்றும் 251  மருத்துவப் பணியாளர்கள்  மற்றும் 714 அங்கன்வாடிப்  பணி யாளர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய உள்ளனர். 

    1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மாத்திரை,  2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்களுக்கு முழு மாத்திரை மற்றும் மகளிர் முழு மாத்திரை வழங்கப்பட உள்ளது.  

    குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
    இம்மாவட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், பள்ளி நிர்வாக குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகசங்கத்தினர் மற்றும் 

    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரையின் பயன் பற்றியும் மாத்திரைகள் கொடுக்கப்படும் நாள் பற்றியும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எடுத்துக் கூறுமாறு மாவட்ட கலெக்டர்  ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×