என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் அதிகாரிகள் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தபோது எடுத்த படம்.
தனியார் வசம் இருந்த கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு
அரியலூர் அருகே தனியார் வசமிருந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை அறநிலையத்துறை தன்வசப்படுத்தியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் கண்டிராதித்தம் கருப்புசாமி அய்யனார் கோவிலில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வந்ந திருமண மண்டபத்தை அரசு இந்து சமய அறநிலைத்துறை சுவாதினம் (தன்வசம் கையகப்படுத்தியது) செய்தது.
இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் அனுமதியில்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலின் உள்ளே இருந்த மண்டபம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கின்படி 25.2.2022 அன்றைய உத்தரவின்படி தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் தமிழக அரசின் அறநிலைதுறை வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
எனவே இந்த மண்டபத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளும் வகையில் அனுமதி பெற திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் நிர்வாகத்தை அணுகி சுப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கோவிலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த மண்டபத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்தும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நாகராஜன் முன்னிலையில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் மணிவேல் தலைமையில், கண்டராதித்தம் வருவாய் அலுவலர் மேகலா, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராமமூர்த்தி ஆகியோர் கையகப்படுத்தினர்.
நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன், காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் செந்தில்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.
Next Story






