என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    திருமானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    இயற்கை வேளாண்மை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

    திருமானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை செய்வது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    திருமானூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  ஏகம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி தங்கசண்முகசுந்தரம் கூறியதாவது: விவசாயத்துறை சார்ந்த படிப்பினை பயிலும் பிளஸ் 1 மற்றும்  பிளஸ் 2 பள்ளி மாணவர்களிடத்தில் ரசாயன பயன்பாடு 2ம்  உலகப்போருக்குப் பின் இந்தியாவுக் குள் வந்தது பற்றியும், 

    இன்றைய உலகில்  ரசாயன வேளாண்மையை  தவிர்த்து இயற்கை  வேளாண்மை செய்வது குறித்தும், நோயில்லாமல் வாழ இயற்கை வேளாண்மையை கடை பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. 

    எனவே வேளாண்மை சார்ந்த படிப்பினை மேற் கொள்ளும் திருமானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இயற்கை வேளாண்  விஞ்ஞானி நம்மாழ்வார் போன்று  எதிர் காலத்தில் திகழ வேண்டும் எனவும், விரைவில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வயலில் பயிலரங்கம் நடத்தப்படும் என தெரிவித்தார்.  

    இதில் ஏகம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த முருகானந்தம், அசோகன் பள்ளி உதவி தலைமை  ஆசிரியை மற்றும்  வேளாண்துறை சார்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×