என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி கொலை வழக்கில் இளைஞர் கைது
- மோதிரத்திற்காக கொலை
- தனிப்படையினர் விசாரணையில் அம்பலம்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தேளூர் விவசாயி கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (86). விவசாயியான இவர், கடந்த 22.1.2.23 அன்று தனது வயலில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.இது குறித்து கயர்லாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில், கயர்லாபாத் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் ராஜவேல் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராஜேஷ் (28) என்பவர் மது போதையில், கோவிந்தசாமி கையில் அணிந்திருந்த மோதிரத்துக்காக அவரை கட்டையால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த வந்த ராஜேஷை தனிப்படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.






