என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம்
    X

    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம்

    • உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள்

    அரியலூர்:

    உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு வாகனம் தொடக்கி வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    முன்னதாக அவர், மக்கள் தொகை குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து அவர், பொதுமக்களுக்கு மரக்கன்றுடன், மஞ்சப்பைகள் வழங்கினார். இதில் அன்னை தெரசா செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் குருநாதன் கந்தையா, மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் சுதாகர், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் இளவரசன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன் மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×