search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமா?
    X

    அரியலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமா?

    • அரியலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
    • தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை

    அரியலூர்,

    திருச்சிக்கு அடுத்தபடியாக அரியலூர் பெரிய வியாபார ஸ்தலமாகும். 40 கி.மீ சுற்றளவு பகுதியிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், மளிகை, நகைகடை, ஜவுளிக்கடை ஆகியவை மிகவும் பிரபலமான நிறுவனங்கள் இங்கு உள்ளன.

    அரியலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்துநிலையம் புறவழிச்சாலையில் செயல்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருதையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    சென்னை, திருச்சி, தஞ்சாவூர் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

    சேலம், ஆத்தூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், செந்துறை வழியாக வரும் பேருந்துகள் ரயில்வே மேம்பாலம் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும்.

    கும்பகோணம், ஜெயங்கொண்டம் வழியாக வரும் பேருந்துகள் கலெக்டர் அலுவலகம், புறவழிச்சாலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும்.

    பொதுமக்கள் நலனை முன்னிட்டு தற்காலிக பேருந்துநிலையத்திலிருந்து –நகரப்பகுதிக்குள் செல்ல நகரபேருந்துகளை இயக்கப்பட வேண்டும். மற்ற நாட்களில் லாரி, கனரக வாகனம், பேருந்து, கார். வேன், மினி லாரி சென்றுவர அனுமதிக்கக்கூடாது.பொதுமக்கள் நலன்கருதி கூட்டநெரிசல், சாலை விபத்தினை தடுக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலிஸ் சூப்பிரெண்டுக்கும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×