என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர்  கைது
    X

    சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது

    • ராஜேந்திர சோழன் படம் இடம் பெறாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது
    • 26 நபர்களை காவல்துறையினர் கைது செய்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவிலை கட்டிய மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழா கொண்டாடப்படுகிறது. மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் மாமன்னர். ராஜேந்திர சோழனுடைய புகைப்படம் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் வெளிப்புறம் என எந்த இடத்தில் வைக்கப்படவில்லை. அரசு நிகழ்ச்சியிலும் புகைப்படம் இடம்பெறாதது குறித்து இந்து முன்னணி கட்சியை சார்ந்த மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு, திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் மாவட்ட பொதுச் செயலாளர் அய்யம்பெருமாள் மாவட்ட செயலாளர், ராஜா திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா, உள்ளிட்ட 26 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×