search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியின் டயர்களை திருடிய டிரைவர்
    X

    லாரியின் டயர்களை திருடிய டிரைவர்

    • ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 8 லாரி டயர்களை டிரைவர் திருடி சென்றார்
    • தலைமறைவானவரை பிடித்து போலீசார் கைது செய்தனர்

    அரியலூர்,

    திருச்சி ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போட்டில் பல்கர் லாரியின் ஓட்டுநராக கடந்த 4 ஆண்டுகளாக பணிப் புரிந்து வந்த மதுரை மேலூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் காஞ்சிவனம்(48) என்பவர் கடந்த 8 ஆம் தேதி கும்பகோணத்தில் லோடு இறக்கி விட்டு லாரியை அரியலூர் ராம்கோ சிமென்ட் ஆலைக்கு எடுத்துச் செல்வதாக நிறுவனத்துக்கு தகவல் சொன்னவர் சிறிது நேரத்தில் பல்கர் லாரியின் ஜிபிஎஸ் சிக்னலை அணைத்துத்துள்ளார்.நிறுவனத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது, கைப்பேசியை அவர் எடுக்கவில்லை. லாரியை அவர் ராம்கோ சிமென்ட் ஆலை அருகே நிறுத்திவிட்டு தலைமறைவாகினார்.இதனால் சந்தேகமடைந்த அந்நிறுவனத்தின் கிளை மேலாளரும், திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில், பிரகாஷ் நகரை சேர்ந்தவருமான பாலமுருகன், லாரியை நேரில் வந்து பார்த்த போது, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 8 டயர்கள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து கிளைமேலாளர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த காஞ்சிவனத்தை மதுரை, மேலூரில் வெள்ளிக்கிழமை கைது செய்து, அரியலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×