search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்
    X

    வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்

    • கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை
    • வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார இயக்கம் ஜூன் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்துக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், நம்ம ஊரு சூப்பரு பிரசார முனைப்பு இயக்கத்தினை அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தி, கிராமங்கள் தோறும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றை பொதுமக்களோடு, கிராம துப்புரவு பணியாளர்களை ஒருங்கிணைத்து, அரசு பணியாளர்களும் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.இந்த பணியை அனைத்துதுறை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை (பிளாஸ்டிக் பைகள்) பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    செப்டிக் டேங்க் கழிவுகளை நீரு நிலைகள் மற்றும் பொது இடங்களில் வெளியேற்றும் நிலயைத் தடுக்கும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மலக்கசடு மேலாண்மை மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.இதை மீறும் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், என்றார்.இதில் வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×