என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
    X

    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

    • ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
    • சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா முதலிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் மேற்கொண்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகீராபானு ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள், மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா முதலிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உபயோகிப்பவர் குறித்தும், விற்பனை குறித்தும் எவ்வித அச்சமின்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் எண் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.


    Next Story
    ×