search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
    • கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    அரியலூர்

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, சாலை பாதுகாப்பு திட்ட கோட்டப் பொறியாளர் ஸ்ரீகாந்த், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு, அனைவரும் கட்டாயம் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடித்தால் விபத்தை தவிர்க்கலாம். மேலும் மது அருந்திவிட்டு

    வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்வதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்

    கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட்டும் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன்,

    சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவிக் கோட்டப் பொறியாளர் சிட்டிபாபு, உதவிப் பொறியாளர் இளையபிரபு ராஜன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×