என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தீர்மானம்
    X

    டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தீர்மானம்

    • டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மண்டல தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். தா.பழூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ள இடங்களில் கழிவறை வசதி அமைத்து தர வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத யூரியா வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நலவாரிய சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் காலதாமதப்படுத்தாமல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×