என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
    X

    அரியலூர் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

    • அரியலூர் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்தனர்
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரியலூர்,

    அரியலூரில் விடுதி பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய சங்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், 2021 ஆம் ஆண்டு பணியில் சமையலர்களை பணி வரன் முறை வழங்கி நிரந்தம் செய்ய வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைவராக தமிழ்மணியும், செயலாளராக ஜெயபாலும், பொருளாளராக சுரேஷ்குமாரும் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Next Story
    ×