என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
    X

    லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்

    • மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தை

    அரியலூர்,

    அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.கா.அம்பாபூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் ஆனந்தராஜ்(28). முனியங்குறிச்சியிலுள்ள ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் சுரங்கத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை சுரங்கம் முன் லாரியை நிறுத்திய போது, பின்பக்க தானியங்கி கதவு மூடாமல் இருந்துள்ளது.இதை சரி செய்வதற்காக ஆனந்தராஜ், டிப்பரை தூக்கியபோது, மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து ஆனந்தராஜ் உயிரிழந்தார். இந்நிலையில், ஆனந்தராஜூன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கொல்லாபுரம் கிராமத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற அரியலூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×