என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் கூடுதல் விலைக்கு மது விற்றவருக்கு அபராதம்
    X

    அரியலூரில் கூடுதல் விலைக்கு மது விற்றவருக்கு அபராதம்

    • அரியலூரில் கூடுதல் விலைக்கு மது விற்றவருக்கு அபராதம் விதிக்கபட்டது
    • சேல்ஸ்மேன் இளம்பரிதி அபராதத்துடன் பணிமாறுதல் செய்யப்பட்டார்.

    அரியலூர் :

    அரியலூர் ெரயில்வே கேட் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து 3 முறை தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சேல்ஸ்மேன் இளம்பரிதி, பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் குடோனுக்கு அபராதத்துடன் பணிமாறுதல் செய்யப்பட்டார். அதேபோல் அரியலூர் ெரயில்வேகேட் டாஸ்மாக் கடையில் ரூ. 10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த சேல்ஸ்மேன் திருமேனி என்பவரிடம் இருந்து அபராதம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ. 11 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரூ. 5 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்த அரியலூர் ெரயில்வே கேட் கடைசேல்ஸ்மேன் ரவிச்சந்திரன், பெரம்பலூர் மாவட்டம். கொளக்காநத்தம் கடை சேல்ஸ்மேன் சத்தியசீலன், செட்டிக்குளம் கடை சேல்ஸ்மேன் விநாயகமூர்த்தி ஆகியோரிடம் இருந்து அபராதம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியாக தலா ரூ.5 ஆயிரத்து 900 விதிக்கப்பட்டது.



    Next Story
    ×