என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
- தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
- கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அரியலூர்,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில், மதிமுக மாவட்டச் செயலர் க.ராமநாதன், மாநில விவசாய அணிச் செயலர் வாரணவாசி கி.ராஜேந்திரன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை க.சொ.க.கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலர் மு.கோபால், ஏஐடியுசி மாவட்டச் செயலர் தண்டபாணி, வி.சி.க தொகுதி செயலர் மருதவாணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கையெழுத்திட்டனர். கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
Next Story






