என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவளூர் கிராமத்தில் மலேரியா நோய் விழிப்புணர்வுப் பேரணி
- சிறுவளூர் கிராமத்தில் மலேரியா நோய் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது
- பேரணியை அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.
அரியலூர்,
உலக மலேரியா நோய் எதிர்ப்பு மாத தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்தில், பொது சுகாதாரத் துறை மற்றும் உயர்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற பேரணியை அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். கடுகூர் பொய்யூர் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், அருண்குமார், விளாங்குடி சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமரன், ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி கோகிலா, செவ்வேள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியானது, பிரதான வீதியின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story






