என் மலர்
உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
- சம்பவதன்று பழனிவேல் கடன் தொகை ரூ.4 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க அவரது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
- அப்போது பாலகிருஷ்ணன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45). இவர் கடந்த சில வருடங்களாக நானாங்கூரில் அவரது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவரது உறவினரிடம் வாங்கியிருந்த கடன் தொகை ரூ.4 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க அவரது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
பொய்யூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேலகருப்பூர் பிரிவு பாதையில் சென்றபோது மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், பழனிவேலின் மோட்டார் சைக்கிளை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் பையில் வைத்திருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசில் பழனிவேல் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






