search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் விவசாயிகள் போராட்டம்
    X

    அரியலூரில் விவசாயிகள் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • குறுவையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    அரியலூர்,

    டெல்டாவில் கருகும் நெற்பயிரை காப்பாற்ற தமிழத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும், அரியலூர் மாவட்டம் தூத்தூர்தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் இர.மணிவேல், விவசாய பாதுகாப்புச் சங்க மாவட்ட அமைப்பாளர் க.பாலசிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ஏ.பழனிச்சாமி போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல்,மாவட்டக் குழு உறுப்பினர் டி.தியாகராஜன், விவசாய சங்க பிரதிநிதி த.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் திருச்சி கணேசன் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். போராட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    Next Story
    ×