என் மலர்
உள்ளூர் செய்திகள்

அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
- மாளிகை மேடு, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்
- உட்க்கோட்டைப் பகுதியில் 7 மீ நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூண்னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு ஆய்வு செய்தார்.கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியும் அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம்.தென்னரசு, பின்னர், மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார்.அங்கு, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருள்களின் விவரம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து உட்க்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியையும், அங்கு கண்டெடுக்கப்பட்ட மதில் சுவருக்கு நிறுத்தப்பட்டதாக கருதப்படும் 7 மீ நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூண்னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அருங்காட்சியக ஆணையர் அரவிந்த், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், அகழாய்வு பணிகள் இணை இயக்குநர் சென்னை சிவானந்தம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கடலூர் பரணிதரன், அகழாய்வு பணிகள் இயக்குநர் பிரபாகரன், துணை இயக்குநர் பாக்கியலெட்சுமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






