என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் பல கோரிக்கைகள் வலியுத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூரில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் நியமனத்தில், உயர் சாதிகளின் ஆதிக்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட கழகத்தின் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சிந்தனைச் செல்வன், மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் மணிவண்ணன், பொதுக் குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×