என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- மின் கட்டண உயர்வை திரும்ப பெற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஜனநாயக கட்சி சார்பில் நடந்தது
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அரிசி, பருப்பு, பால், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, வரி உயர்வை திரும்ப பெற கோரியும், பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் கதிர் கணேசன், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வன், அருள்கணேசன், ஒன்றிய தலைவர்கள் அரியலூர் கோவிந்தராஜ், திருமானூர் குமாரசாமி, செந்துறை சுந்தரமூர்த்தி, செய்தி தொடர்பாளர் அழகுசங்கர், மகளிர் அணி பச்சையம்மாள், சுமதி, பார்க்கவலம் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, பச்சமுத்து, பன்னீர்செல்வம், குமார் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story






