என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் முக்காடு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும், பணியின்போது உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஞானசம்பந்தம், உதயசூரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×