என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
    X

    தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

    • அரியலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 15 நாள் ஊதியம் வழங்க கோரிக்கை
    • மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய 15 நாள்கள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் , உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

    உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநிலச் செயலர் தண்டபாணி தலைமையில், பம்பு ஆப்ரேட்டர் த. மருதமுத்து, பிச்சைபிள்ளை, துப்புரவு பணியாளர்கள் குருசாமி, பழனியாண்டி, ரேவதி உள்ளிட்டோர் அளித்த மனுவில், நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மே மாதம் 15 நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் மீதி 15 நாள்களுக்கான ஊதியம் இது நாள் வரை வழங்கவில்லை. இது குறித்து நகராட்சி ஆணையர், மேலாளர்களிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் நிலுவைத் தொகை மற்றும் நிரந்த தொழிலாளிகளுக்கு சொந்த குடியிருப்பு வழங்க வேண்டும்.

    அரியலூர் ஒன்றியம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும் பம்பு ஆப்ரேட்டர், துப்புரவு தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் ரூ.1000 வழங்கப்படாமல் உள்ளது. நாகமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்னும் ஊதியக் குழுநிலுவை தொகை பணம் முழுமையாக கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே கலெக்டர் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×