search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் மறியல்
    X

    ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் மறியல்

    • ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அன்பு மணி ராமதாஸ் கைதை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கண்டித்து அப்பகுதி மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்த போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக அறிவுறுத்தினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்நிலையில் அவ்வழியாக வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா தலைமையிலான அதிரடிப்படை போலீசார் நகர செயலாளர் பரசுராமன் உட்பட பாமக-வினர் 13 பேரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×