search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் -  மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் -   பெண்கள் உள்பட 100 பேர் கைது
    X

    அரியலூர் மாவட்டத்தில் - மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - பெண்கள் உள்பட 100 பேர் கைது

    • அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் ஓஎன்ஜசி நிறுவனத்துக்கு மீத்தேன் எடுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழர் நீதி மற்றும் ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் ஓஎன்ஜசி நிறுவனத்துக்கு மீத்தேன் எடுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

    பொன்னாற்றையும், பொன்னேரியையும் தூர்வாரி ஆழப்படுத்தி இணைத்திட வேண்டும். பொன்னேரியை ஆழப்படுத்தும் மண்ணை சிமென்ட் ஆலை சுரங்க குழிகளில் நிரப்பி புனரமைப்பு செய்திட வேண்டும்.

    முந்திரிக்கு ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதிக் கோரி தமிழர் நீதி கட்சியினர் மனு அளித்தனர்.

    இப்போராட்டத்துக்கு அரியலூர் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழர் நீதி மற்றும் ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 48 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    போராட்டத்தில் நிறுவன தலைவர் சுபா.இளவரசன், தமிழ் மண்ணுரிமை மற்றும் மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்களின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், தமிழர் நீதி கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் தங்க.தமிழன், ஆசைதம்பி, மாவட்டச் செயலர் பாக்கியராஜ், மகளிரணி மாநிலத் தலைவர் கவியரசி

    இளவரசன், தமிழரசு பொதுச் செயலர் கா.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×