search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது
    • ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சார் நிலா தொடங்கி வைத்தார்.

    ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் ஸ்ரீ ஜெயந்தி நாடக சபா கலைக்குழுவினர் மூலம் கரகாட்டம், நாடகம் மற்றும், பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள் ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் மற்றும் பயணிகள் கண்டு களித்தனர்.

    மேலும் ரத்த சோகையை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×