என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற வாலிபர் கைது
- ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தரசு புதுத்தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் மதிவாணன் (வயது27) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மதிவாணனை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மதிவாணனை சிறையில் அடைத்தனர்.
Next Story






