என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போதையில் பூச்சி மருந்தை குடித்தவர் சாவு
    X

    மது போதையில் பூச்சி மருந்தை குடித்தவர் சாவு

    • மது போதையில் பூச்சி மருந்தை குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மேலகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியமுத்து (வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த முனியமுத்து தண்ணீர் என நினைத்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முனியமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×