என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல்
- அரியலூரில் சிறப்பு வாகனச் சோதனையில் சிக்கினர்
- பெற்றோர்களையும் அழைத்து போலீசார் அறிவுரை
அரியலூர்,
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படியும், அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படியும், அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்களின் வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் வழக்கு பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வாகன சோதனையில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் உலகநாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஈடுப்பட்டனர்






