என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியதை படத்தில் காணலாம்
ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா
- உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- வட்டார மருத்துவ அலுவலர் ரத்த தானம் செய்தவர்களை பாராட்டி ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறினார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ,வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






