search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் அருகே போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடைபெற்றபோது எடுத்த படம்.


    வள்ளியூர் அருகே போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

    • சமூகரெங்கபுரம் கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்துக்களை நாடகம் மூலம் விளக்கினர்.
    • முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் இயங்கி வரும் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் தமிழக அரசின் வழிகாட்டு தல் படி போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ராதாபுரம் காவல்உதவி ஆய்வாளர் ஜான்சன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் காந்திமதி, கல்லூரி தலைவர் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் கலந்துக்கொண்ட மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகள் ஏந்தியும், துண்டு அறிக்கைகள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பின்னர் சமூகரெங்கபுரம் கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்துக்களை நாடகம் மூலம் விளக்கினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். மின்னனுவியல் துறை தலைவர் முகம்மது இபாம் வரவேற்றார்.

    முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர், ரோட்டரி சங்க ஒருங்கினைப்பாளர் செய்திருந்தனர்.

    Next Story
    ×