என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை நடைபயணம்: வீடு வீடாக பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்த பா.ஜனதாவினர்
    X

    வீடு வீடாக சென்று பத்திரிக்கை வைக்கும் நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார்

    அண்ணாமலை நடைபயணம்: வீடு வீடாக பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்த பா.ஜனதாவினர்

    • வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 26ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடை பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், வடக்கு மாநகர தலைவர் பாலமுருகன், மேற்கு மாநகர தலைவர் வெங்கடேசன், மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் அலமேலு மெடிக்கல் சண்முகம், செயலாளர் சசி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி கேந்திரம் பொறுப்பாளரும் தொழில் பிரிவு மாநில செயலாளருமான ரங்கராஜன் செய்திருந்தார்.

    Next Story
    ×