என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்.

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்காவிட்டால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும்.
    • மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக் கொன்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் போபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் பேசினர்.

    இதில் சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்க வேண்டும்.

    இல்லை என்றால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும்.

    காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக் கொன்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×