search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளா, புதுச்சேரி ஆதரவை திரட்டி மேகதாது திட்டத்தை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    கேரளா, புதுச்சேரி ஆதரவை திரட்டி மேகதாது திட்டத்தை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    • தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
    • ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசியலில் காவிரி விவகாரம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான். கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பது, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து முழங்கி வருவது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிக்க முடியும்.

    இதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும்.

    மேகதாது அணைக்கு அனுமதியளிக்கும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு இல்லை என்பதை சான்றுகளுடன் எடுத்துக் கூறி புதிய அணைக்கு அனுமதி அளிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு வகுக்க வேண்டும். தமிழகத்திற்கு சோறு படைக்கும் காவிரி பாசன மாவட்டங்கள் வறண்டு விடாமல் இருப்பதையும், அங்குள்ள விவசாயிகள் வாடி விடாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×