search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    தூத்துக்குடி 39-வது வார்டுக்குட்பட்ட பகுதி பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்த காட்சி.

    தூத்துக்குடி தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி முன்பு அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்பை தொடங்கினார்.
    • வடக்கு ரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயரமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி முன்பு குறைகேட்பை தொடங்கினார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    பின்னர் தெப்பக்குளம், மாரியம்மன் கோவில் தெப்பம், செல்வீஜர் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, இரண்டாம் கேட் பகுதியில் நடைபெறும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

    கழிவுநீர்

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வடக்கு ரதவீதி, கீழரத வீதி பகுதிகளில் கால்வாய்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கியுள்ளன. அதனால் கழிவுநீர் வீட்டிற்குள் வரும் நிலையுள்ளது. அதை சீர்செய்து தரவேண்டும்.

    வடக்கு ரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயரமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும்.

    காய்கறி அங்காடி

    இந்த சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பண்ணை காய்கறி அங்காடியை போல் மாநகராட்சி மண்டபம் அருகில் அமைத்து தரவேண்டும்.

    புதிய ரேஷன் கார்டு மற்றும் விதவை பெண் வேலை வாய்ப்பு, குறுகிய சந்துப்பகுதியில் வீடு மட்டத்தை விட குறைவாக பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர் கலைச்செல்வி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், நாராயணன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், செல்வக்குமார், அவைத்தலைவர் கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×