search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின்அனைத்து நலத்திட்ட உதவிகளும்  மலைவாழ் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி
    X

    மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

    அரசின்அனைத்து நலத்திட்ட உதவிகளும் மலைவாழ் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி

    • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்டில் வாழும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டது.

    மேலும், 102 நபர்களுக்கு ரூ .71.26 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டுக்கான அரசு மானிய விடுவிப்பு உத்தரவு ஆணைகள் மற்றும் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

    வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் , மலைவாழ் மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு குறைந்தது 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆகையால், மலைவாழ் மக்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதுவரை பொதுத்தேர்தலில் மட்டும் வாக்களித்து வந்தீர்கள். இப்பொழுது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மலைவாழ் மக்கள் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது .

    அந்த வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியம் வழங்கப் படுகிறது. தாட்கோ மூலம் 2022-2023 நிதியாண்டில் கறவை மாடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு வங்கி மூலம் கடனும் , தாட்கோ மூலம் மானியமும் வழங்கப்படுகிறது .

    பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. செட்டில் மென்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ .38.43 லட்சம் மதிப்பீட்டில் மானியமும் , வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு இளைஞர்களுக்கான ரூ .18.85 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு ரூ 11.50 லட்சம் மானியமும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ .0.91 லட்சம் மானியமும் என மொத்தம் 102 நபர்களுக்கு தாட்கோ மூலம் ரூ .71.26 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் என மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

    இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் , தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஷ்வந்த் கண்னண் . வட்டாட்சியர் கணேசன் ,ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கனிமொழி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×