search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் -  தனபால் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு
    X

    தனபால் MLA

    தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் - தனபால் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு

    • அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது.
    • தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை.

    அவினாசி:

    அவினாசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., தனபால் தொகுதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். அப்போதுஅவினாசி ஒன்றியம் கருவலூரில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும். வளர்ந்து வரும் கருவலூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.வஞ்சிபாளையம்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். வஞ்சிபாளையத்திலிருந்து முருகம்பாளையம் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.சின்ன ஒலப்பாளையம் கானாங்குளம், குப்பான்டம்பாளையம், வடுகபாளையம்,பிச்சான்டம்பாளையம், ஆலாம்பாளையும் ஆகிய பகுதி எ.டி.காலனி மக்கள் மயானத்திற்கு சாலைவசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்.

    அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது. இப்பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் அவினாசி. திருப்பூர், நியூ திருப்பூர் ஆகிய பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கும், விசைத்தறி கூடங்களுக்கும் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாவை, மாணவியர் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா.எனவே தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று பயனிகளை ஏற்றி இறக்கி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.தனபாலிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிகூறினார்.

    Next Story
    ×